ஆர்க்கே.!
ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டு
சிதறுறும் மீட்சி எல்லைக்கோடுவரை
காற்றடைக்கப்பட்டுப் பெருத்தாலும்
வானளப்பதான நோக்கமாய்
மேல்நோக்கி பயணித்தாலும்
உயரே வெகு உயரே எங்கோ
காணாமலேயே போய்விடுகின்றன-
பலூன்கள் என்றழைக்கப்படும்
வளிப்பந்துகள்.
மற்றவை பெரும்பாலும்
உற்றபடிக்குள்ளே பெருத்திருந்தாலும்
சிறுவலியெனும் ஊசி முனைக்குக்கூட
முழுவதுமாய் உடைபட்டு
சிதறி வெளியேறி
வளியுலகு மறந்து வலியுலகில்
கரையேறுகின்றன–
சமயங்களில் என்னைப்போல.!
!
| ReplyForward |

அட்ரா…அட்ரா…
வாழ்கையும் அப்படித்தான். நல்ல வெளிப்பாடு.
“காயமே இது பொய்யடா… வெறும் காற்றடைத்த பையடா!”
’நச்’சென்று நயம்பட உரைத்த கவிதை.