சசிகலா விஸ்வநாதன்/மல்லுக்கட்டும் மனது

இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது‌
இணைய கால கவியரங்கம்
புதன்கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு
மல்லுக்கட்டும் மனது
அவனியிலே அல்லல்;
மனது மல்லுக்கட்டும்.
தினமும், தினமும்
,தன் மனதோடும், உலகோடும்.
சிறு உளியால்
பொள்ளும் கல் என..
எட்டும் என நினைத்து எட்டிதான் பார்க்கிறேன்;
எட்டியது எல்லாம்
எல்லோருக்கும் கிட்டுமா?
கிட்டியே விட்டாலும்,
கிட்டியோர்க்கு, தட்டாமல் நிலைக்குமா?
தட்டித்தடவி,முட்டி மோதி,
அனுதினமும் அல்லல்:
ஆயினும் ஒரு சுவையான எதிர்ப்பு;
இது ஒன்றே என்
வாழ்க்கை பரிசலின்
துடுப்பு, துடிப்பு,பிடிப்பு;
வாழ்க்கையின் படிப்பு.


20-12-2023