
மாயனே, மன்னும் வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத் துறைவனை.
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை,
தாயைக் குடல் விளக்கம் செய்ததா மோதரனை, துயோம்ஆய் வந்துநாம். தூமலர்கள் தூய்த் தொழுது,
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க. போய பிழையும் புகு தருவான் நின்றனவும் தீயினில்
தூசிஆகும். செப்பேல் ஓர் எம்பவாய்.
விளக்கம் :
மாயனை. நிலைபேறு டைய வடமதுரையில் பிறந்த மைந்தனை, பரிசுத்தமான நிறை நீரைப் பெற்ற யமுனை யாற்றின் கரையில் வளர்ந்தவனை. இடையர் குலத்திலே தோன்றிய அழகான விளக்குப் போன்றவனை, பெற்ற தாயின் குடல் எங்கும் விளங்கித் தோன்றுமாறு செய்த தாமோதரனை, தூய உடலும் உள்ளமும் கொண்டு வந்து நல்ல பூக்களைத் தூவி வணங்கி வாயினால் மூர்த்தியின் புகழ் பேசி, மனத்தினால் அப்பெருமான் திறத்தை நினைப்போமானால், முன் செய்த தவறுகளும் , இனிச் செய்ய இருக்கும் பிழைகளும் நெருப்பில் இட்ட பஞ்சாக அழியும். ஆதலால் அவன் புகழைப் பாடு.
