யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி/பிரம்ம ஞானம்

அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 62/

எனக்குப் பிடித்த கவிதைகள் வரிசையில் இன்று யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்களின் கவிதை . தலைப்பு பிரம்ம ஞானம் . பிரம்மத்தின் ஆதி நிலையான இறைவெளி முதல் ஆறறிவு கொண்ட மனித மனம் வரை உள்ள தொடர்பை எளிமையாக விளக்கும் ஞானக் கவிதை .

இறை வெளியே தன்னிறுக்கச்
சூழ்ந்தழுத்தும் ஆற்றல்
இதன் திணிவு மடிப்பு விழச்
சுழலும் நுண் விண்ணாம்

நிறை வெளியில் விண் சுழல
நெருக்குகின்ற உரசல்
நிலை வெளியில் எழுப்புகின்ற
நேர் அலைகள் காந்தமாம்

மறை பொருளாம் காந்தம்
தன்மாத்திரைகள் ஐவகை
மலைக்காதீர் விண்கூட்டம்
மாபூதம் ஐந்துமாம்

முறையாய் அக் காந்த அலை
மனமாய் உயிர் உடல்களில்
மதி உயர்ந்திவ் வுண்மை பெற
மா பிரம்ம ஞானமாம்

—————–