சுரேஷ் ராஜகோபால்/கடன் கேட்டால்!

சொல் புதிது, இணைய கால, 62வது கவி அரங்கம், தேதி 20.12 2023 கிழமை புதன், நேரம் மாலை 05.10,”கடன் கேட்டால்!” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.

கடன் கேட்டால்
யார் தருவார்?

அடகாகப் பொன் தந்தால்
கடன் கிடைக்கும்.

ஜாமீன் போட நபரிருந்தால்
கடன் கிடைக்கும்.

அவனால்
பொன் வைக்கும் இடத்தில்
பூதான் வைக்க முடியும்

அந்த நிலையில்
அவனுக்கு யார் கடன் தருவார்?

அந்த நிலையில்
அவனுக்கு யார் கடன் தருவார்?

கடன் கேட்டால்
யார் தருவார்?

சுரேஷ் ராஜகோபால்.
சிட்லபாக்கம்
20 12 2023 மாலை 05.10