சசிகலா விஸ்வநாதன்/பேச்சின்றி ஒரு பேச்சு

இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
வியாழக்கிழமை
மாலை மணி 5-15



பேசிப் பேசி பழகி விட்டேன்
பேசாமல் இருந்தே இல்லை!
எதற்கும் ஒரு கருத்து.
எதற்கும் ஒரு எதிர் பேச்சு‌
அல்லது ஒரு சார்பு பேச்சு
பேசிப் பேசி பரவினேன்.
துடிப்பாகவும் துடுக்காகாவும்.
“நன்று” என என் உலகம்
பாராட்ட ..
மேலும் பேச…
மேலும் அங்கிகாரம்.
என்னிலும்
மேன்மையாய் பேசும்
இளைஞர்கள் வர;
ஒரு நாள் அரங்கிலிருந்து இறங்கினேன்.
பேசாமல் இருக்க
முடியாமல்;
இறையிடம் பேச ஆரம்பிக்க,
இறை சொல்லியது;
சொல்லாத சொல்
பேசாத பேச்சு
பயில்; என்று
மெது மெதுவாக பயில..
கையகப்பட்டது ;
பேசாமல் பேசும் கலை
துடிப்பு,வெடிப்பு; கடுப்பு, துடுக்கு;
கடுமையாய் குறைந்தது
இறை பாராட்டவிலலை;
கைதட்டவில்லை;
வெறுமே ஒரு புன்னகை!
அது ஒன்றே போதுமே..
என்னை சமன் செய்ய



21-12-2023