ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 57/அழகியசிங்கர்

23.12.2023 – சனிக் கிழமை

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

மோகினி:  என்ன உற்சாகமாக உள்ளீர்கள்?

அழகியசிங்கர் : ஆமாம்.  நவீன விருட்சம் 124வது இதழ் வந்துவிட்டது.

ஜெகன் :  வாழ்த்துகள்

மோகினி : தொடர்ந்து வருமா நவீன விருட்சம்.

அழகியசிங்கர் :  நிச்சயமாக வரும்.

மோகினி :  இந்த முறை புத்தகக் காட்சியில் விருட்சம் கலந்து கொள்கிறதா?

அழகியசிங்கர் :  கலந்து கொள்கிறேன்.

ஜெகன் : ஆனால் புத்தகக் காட்சிக்கு நீங்கள் டூ வீலரில் போகாதீர்கள்.

அழகியசிங்கர் :  முடியாது போல் இருக்கிறது. ஆட்டோ ஏற்பாடு பண்ண வேண்டும்.

மோகினி :   அண்ணாசாலை மிக மோசமாக இருக்கிறது.  நீங்கள் திரும்பும்போது பிரச்சினை ஆகிவிடும். 

அழகியசிங்கர் : எனக்கும் தெரியும்.  70 வயதாகிவிட்டது.  ரிஸ்க் எடுத்துக்கொள்ள முடியாது.

மோகினி :  இன்றைய  இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.

அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.

ஜெகன்: இன்று பேசியது போதும்.

அழகியசிங்கர்.  இரவு வணக்கம்.

(இரவு 10.31 மணிக்கு)