
இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
சனிக்கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு
நரைப்பட்ட தலைமுடியும்;
திரைப்பட்ட இரு விழிகளும்;
அடை பட்ட இரு செவிகளும்;
கோணிட்ட இரு கால்களும்;
செயலற்ற இரு கைகளும்;
படபடக்கும் நெஞ்சும்;
இரைக்கும் சுவாசமும்;
மட்டுமே இருந்தும்:
மனம் தெளிவாய் அன்புடன் இருக்க;
திண்மையும்,
வன்மையும் கூடும்;
வண்மையதற்கு
வண்ணம் பூச;
தினம் ஒரு வானவில்
காணலாம்; வையகத்தில்:
வறியோர் வதனத்தில்.
23-12-2023
