நாகேந்திரபாரதி/இணைய வழிக் கவி அரங்கம் 66

எனக்குப் பிடித்த கவிதைகள் வரிசையில் இன்று ஒன்பதாவது கவிதை. இது அழகியசிங்கரின் ‘ கவிதையும் ரசனையும் – தொகுதி 1- புத்தகத்தில் உள்ள க நா சு அவர்களின் கவிதை .

இந்தக் கவிதையில் செய்ய வேண்டிய நேரத்தில் ஒரு செயலைச் செய்யாதவன் , செய்யத் தேவையில்லாத நேரத்திலும், என்ன செய்வது என்று யோசித்து ஒன்றும் செய்யாமல் காலம் கடத்தும் ஒருவனின் விட்டேத்தியான மனநிலையைப் பிரதிபலிப்பதாக எனக்குத் தோன்றுகிறது .

காலம் தாழ்ந்த பின் வந்தவன்

நாடகம் பார்க்கக் கிளம்பியவன்
நாடகம் முடிந்தபின்
நாடகக் கொட்டகையில் புகுந்தேன்

எல்லா நாற்காலிகளும்
காலியாகக் கிடக்கின்றன

எந்த நாற்காலியில் உட்காரலாம் என்று
யோசித்துக் கொண்டே
நான் நிற்கும்போது
பொழுது
விடிந்து விட்டது

—————–க நா சு