ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 59/அழகியசிங்கர்

26.12..2023 -செவ்வாய்க் கிழமை

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
 மோகினி:  திடீரென்று இரண்டு நாட்கள் மயிலாடுதுறைக்குப் போய் வந்தீரே போலிருக்கே?
அழகியசிங்கர் : அச்சுக்குக் கொடுக்க வேண்டிய புத்தகங்களை அனுப்பிவிட்டுத்தான் போனேன். கோயிலுக்கு. நான் வர முடியாது என்று கொல்லியிருக்கலாம்.  ஆனால் சொல்ல வில்லை.
ஜெகன் :  காரணம் இருக்கிறது.  பெண் குடும்பம் பையன் குடும்பம் எல்லாம் வருவதால் அவர்களுடன் போக விரும்பினீர்களா?
மோகினி : அப்படிப் போனதில் உங்கள் அனுபவம்.
அழகியசிங்கர் :  சமீபத்தில் சாகித்திய அக்காதெமி பரிசு பெற்றி நீர் வழிப் படூஉம் என்ற தேவி பாரதியின் புத்தகத்தைப் படித்துக் கொண்டு போனேன். 84 பக்கங்கள் படிக்க முடிந்தது. இரண்டாவது கால் வீக்கம்.  போகும்போது ஒன்றும் தெரியவில்லை.  வரும்போது வீங்கி விட்டது.
மோகினி :  உங்களால் படிக்க முடிந்ததா?
அழகியசிங்கர் :  இதுவரை தேவி பாரதி புத்தகத்தை படித்ததில்லை. பரிசு கிடைத்தபிறகு அந்தப் புத்தகத்தை ஒரு புரட்டுப் புரட்டலாமே என்று தோன்றியது.  அறிவிப்பு வந்தவுடனே டிஸ்கவரி புக் பேலஸிற்கு போன் செய்து அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு வந்தேன்.
அழகியசிங்கர் :ஆனால் படித்தபிறகுதான் தெரிந்தது. அது அவ்வளவு சுலபமாகப் படிக்கக் கூடிய புத்தகம் இல்லை என்று.  காருமாமாவின் மரணத்துடன் ஆரம்பிக்கிறது நாவல்.  பல ஆத்தியாயங்களில்  மாமாவின் மரணமும், அதன் தொடர்ந்த நிகழ்ச்சிகள்தான்.  துல்லியமான விபரங்களுடன் தேவி பாரதி எழுதிக்கொண்டே போகிறார். மொழி நடை சிக்கலாக இல்லாவிட்டாலும் உடனே வேகத்துடன் படித்து விட முடியாது.  அவருக்கு என் வாழ்த்துகள். நான் இன்னும் முழுவதும் படித்துவிட்டு எழுதுவதாக உள்ளேன்.
ஜெகன் : நீங்கள் அப்படித்தான் சொல்வீர்கள் ஆனால் எழுத மாட்டீர்கள்.
அழகியசிங்கர் :  உண்மைதான்.  இந்த நாவலில் 84 பக்கங்கள் படித்திருக்கிறேன்.  முழுவதும் படித்த பிறகு எழுத வேண்டும் 
மோகினி :   இன்னொரு சிறுகதைத் தொகுப்பையும் எடுத்துச் சென்றீரே?
அழகியசிங்கர் : ஆமாம். சுகாவின் வேணு வன வாசம்.  அதில் ஒரு கதையைப் படித்துப் பார்த்தேன்.  வரும் வெள்ளிக்கிழமை அதை எடுத்துப் பேசலாம் என்று தோன்றுகிறது.
மோகினி :  இன்றைய  இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.
அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.
ஜெகன்: இன்று பேசியது போதும்.
அழகியசிங்கர்.  இரவு வணக்கம்.
                    (இரவு 10.30 மணிக்கு)