மதுவந்தி/கவிதையைக் கட்டிக் கொண்டு


இன்று 25.12.23 இணைய கால கவியரங்கில் நான் வாசித்த எனது கவிதை கீழே.

       கவிதை வாசித்து 
       ஒலி வடிவில் பதிவு செய்யும் 
       இணைய கால கவியரங்கம் 
       அருமையான, வித்யாசமான
       முயற்சியாய் நடக்கிறது. 
       கவிதைகள் கேட்கும் போது 
       வாசிப்பவர் குரல், கவிதையும் தாண்டி 
       பின்னால், விஷ்ணு சகஸ்ரநாமம்,
       பறவையின் கீச்சொலி,
       குழந்தைகளின் சிரிப்பொலி,
       பேருந்து நிலைய ஒலிகள்,
        என கூடவே கேட்கும் நல்லோசைகள்
        கேட்கும் அனுபவத்தை இன்னும்
        அழகாக மாற்றுகின்றன. 
         நம்மை நாமாக 
         நம் சூழ்நிலைதானே 
         ஆக்குகிறது. 
         ரயில் பயண நடுவே 
         கவிதை வாசிப்பு கேட்கத் 
         தயாரானேன். 
         எங்கே போனாலும் 
         கவிதையைக் கட்டிக் கொண்டு 
         திரியனுமா என 
         இணையர் சலித்துக் கொள்ள,
         கவிதைதான் என்னைக் 
         கட்டிக் கொண்டு திரிகிறது 
         என நினைத்துக் கொண்டேன்.  
                                    .

One Comment on “மதுவந்தி/கவிதையைக் கட்டிக் கொண்டு”

Comments are closed.