சுரேஷ் ராஜகோபால்/புதுமையை வரவேற்போம்

சொல் புதிது, இணைய கால, 68வது கவி அரங்கம், தேதி 26.12 2023 கிழமை செவ்வாய், நேரம் மாலை 05.10,”புதுமையை வரவேற்போம்” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.

பழமையில் ஊறிக்கிடந்த இந்த பூவுலகைத்
தட்டி எடுத்து வளமை செய்வோம்
கொட்டிக் கொடுத்தாலும்
கிடைக்காத புது உலகாக மீட்டெடுப்போம் .1

மழை பெய்யும் காலையிலே
நன்றாகத் துடைத்து விட்டு
வெயில் காலத்தில் உலர வைத்து
புதுமை உலகம் படைப்போம் . 2

கயமை நெஞ்சைக் களைந்துவிட்டு
புதுமை தன்னை புகுத்தியே கைதட்டுவோம்
முடியும் என்றால் முடியும்தானே
முடித்துவிட்டு மார் தட்டுவோம் . 3

விழலைக் களைந்துவிட்டு
உழவினை புதுப்பித்து
நல்ல நாத்தெடுத்து வளம்தனை
பரப்பிடுவோம் எந்நாளும் . 4

மண்ணுக்குள் மறைந்திருந்த புதுமையை
வளமாக விளையவிட்டுக் காத்திருப்போம்
கடைசி கதிரும் புதுமை பேசிட
வரவேற்போம் வரும் நாளில் . 5


சிட்லபாக்கம்
26 12 2023 மாலை 05.10