
இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
புதன் கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு
வான் திறந்து நின்று பொழியும் மா மழை என்று;
கவிதை புனையும் கவிகளின் இடையே
நான் நீட்டோலை வாசியா நெடு மரம்.
பண் ஒன்றும் அறியவில்லை.
பாட்டொன்றும் பாடத் தெரியவில்லை.
பெருங்கவிகளின் கவிகளை
மிக்க பயின்றுதும் இல்லை.
ஏற்றம் பெற எதுவும் கற்றதில்லை.
எந்த ஒரு சிறப்பும் எனக்கு இந்நாள்
வரை எனக்கில்லை.
என்னென்று சொல்வேன்?
எந்நாளும் எழுது கோல் எடுத்து எழுதியதில்லை.
அன்புடன் தோழி
ஒருத்தி சொன்னாள்:
நீ; எழுதிப் பார்!
எழுத வரும் உனக்கு
என்று பகர;
இதோ,இன்று எழுத ஆரம்பித்து உள்ளேன்.
குறை நிறை எடுத்து இயம்புங்கள்.
என்னையும் தேற்றிவிடுங்கள்;
ஒரு கவியாய்.
ஏற்றிவிடுங்கள்;
அரங்க மேடையில் அன்புடன்.
27-12-2023
