செ.புனிதஜோதி கவிதை

இயேசுவை
சிலுவையில்
அறைந்தபடியே
வரைந்து முடிக்கிறான்
ஒரு ஓவியக்காரன்

பார்த்துக்கொண்டிருந்த
குழந்தை மரியாள்
உயிர்தெழுந்தவரை
மீண்டும்
ஏன்
அறைகிறாய்
என்கின்றாள்?

உன்னை
போல்
எல்லோரிடத்திலும்
இந்த கருணையின்
கண்கள் திறக்கவில்லையே
என்றான்

அவன் கண்களை
உற்றுநோக்கியவள்
பெரும் அமைதியோடு
நகரத்தொடங்கினாள்