சிறகா/நன் முத்து

68 வது இணைய கால கவியரங்கத் தில் நவீன விருட்சம் 100 ம் இதழில் வெளியான சிறகா வின் கவிதை.
வாசிப்பது சிறகா .

தலை தூக்கி நிற்கும் பளபளப்பான நாகம் போல்

இலையிலிருந்து உதிரும் முன்

கோர்த்து நிற்கும் மழைத் துளி

கேள்விக் குறியின் சாயலில்

சற்றும் இதை அறியாமல்

குனிந்து குனிந்து பொறுக்கு கிறாள்

கிளிஞ் சல்கள் ஒருத்தி

இதழ் மூடிய சிப்பி ஒன்றை

மும்முரமாக

நெம்பித் திறக்கையில்

நன் முத்து எகிறி

நட்சத்திரங்களுக்கு இடையில்

பதிந்து கொண்டது நட்சத்திரம் என

கடலோடு

அவள், நிற்காத அலையில்

கால்கள்.