புவனா சந்திரசேகரன்./மனிதக் கடவுள்

69 ஆவது இணைய காலக் கவியரங்கம்

கடமைச் சிலுவைகளைத்
தோளில் சுமந்து
குடும்பப் பொறுப்பெனும்
முள்கிரீடம் தரித்து
ஓயாத உழைப்பையும் போராட்டங்களையும்
கசையடிகளாய்ப் பெற்று
தினம் தினம்
தான் சுமந்த
சிலுவைகளில் அறையப்பட்டு
வேதனையில் உயிரிழந்து
மீண்டும் உயிர்த்தெழுகிறான்
மனிதக் கடவுள்!
ஆனாலும்
மலையேறத் தயங்குவதில்லை!
வீழ்ச்சியும் எழுச்சியும்
சுழற்சியின் சூழ்ச்சியன்றோ!