
68வது இணையகாலக் கவியரங்கம்
கூட்ட நெரிசலில்
முண்டியடித்துக்கொண்டு ஏறும்பொதெல்லாம்
பார்த்து பத்திரம் என்றோ
அடுத்த பேருந்தில் போகலாமே என்றோ
யாரோ யாரிடமோ சொல்லும்
அனுசரணை மொழிகள்
நமக்கு மட்டுமேயானவை போல்
செல்லங் கொஞ்சியபடி
புத்தம் புதிதாய்
புன்னகைக்க வைக்கின்றன.
