
69-வது சொல் புதிது இணையகாலக் கவியரங்கம்
அவள்
கைகள் தீண்டும்போது
அவன் மனம் குளிர்கின்றது!
அவள்
கனவில் வரும்போது
அவன் உள்ளம் மகிழ்கிறது!
அவள்
தேடி நாடி வரும்போது
அவன் இதயம் துடிக்கிறது!
அவள்
கண்கள் படபடக்கும்போது
அவன் கனவில் மிதக்கிறான்!
அவள்
கண்ணில் நீர் வடியும்போது
அவன் நெஞ்சில் உதிரம் கொட்டுகிறது!
ஓ .. இதுதான் காதலா
பள்ளிக்கரணை, சென்னை
