சுரேஷ் ராஜகோபால்/தாமு மாமா

சொல் புதிது, இணைய கால, 69வது கவி அரங்கம், தேதி 27.12 2023 கிழமை புதன் , நேரம் மாலை 05.10,”தாமு மாமா ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.

செய்யாத குற்றத்துக்கு
அவன் மீது
அப்பாவிடம் குறை கூறிய
தாமு மாமா. 1

வீட்டுக்குள்ளே அப்பாவின்
கோபக்குரல் கோரமாகக்
கேட்குதே உள்ளே
செல்லவும் அச்சம் தடுக்குதே. 2

அப்பாவின் குரலோங்கி
கூப்பிட்டார், உள்ளே பாய்ந்தவன்
பயத்தில் சுவற்றில்
சரிந்து அமர்ந்தான். 3

“பளீர்” என்று கன்னத்தில்
அறைந்தார், சுவற்றில் சரியாமல்
உட்கார முடியாதா?
திகைத்தேன் வலியால். 4

சரிந்து உட்கார்ந்ததுக்கு
அடியோடு போச்சு
தாமு மாமா சொன்ன
கோளுக்கு என்ன தண்டனையோ? தெரியவில்லை !! 5


சிட்லபாக்கம்
27/12/2023 மாலை 05.10