ஆர் வத்ஸலா/எவன் அவன்?

சொல் புதிதுவில் 28/12/23 அன்று நடக்கும் 70 ஆவது இணைய வழி கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை:


பதினைந்து வயதில்
திரைப்படப் பாடல்களின்
தாக்கத்தில்
காதல் தோய்ந்த கவிதை
எழுதிய நோட்டுப் புத்தகம்
அம்மா கையில் அகப்பட்டு
”யாருடி அவன்?”
எனக் கேட்டாள்
அடி பின்னிய பின்

மாணவ விடுதியில்
இருக்கும் தைரியத்தில்
எழுதப்பட்டது
பொறாமை பிடித்த
மாணவி ஒருத்தியால்
வார்டன் கைக்குப் போய்
மூன்று வாரயிருதிகளுக்கு
வெளியில் போகும் அனுமதியை ரத்து செய்தாள்
அதே கேள்வியை ஆங்கிலத்தில்
கேட்ட பின்

கணவரின் அருகாமையில்
கவிதைகள் அண்ட மறுக்க
நிம்மதியாக இருந்தது

அவர் போனபின்
எண்பதாவது வயதில்
எழுந்த கவிதைகளில்
ஒன்று
காதல் கவிதையாகிப் போக
அறிவுஜீவி
இலக்கிய நண்பர் கேட்டார்
அதே கேள்வியை
பிரத்யேக புலன உரையாடலில்

                   ”வத்ஸலாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள் (1991-2023)”