
உள்ளக் குறுகுறுப்பில்
புரட்டிப்பார்க்கிறேன்
கடந்த வருடநாட்குறிப்பின்
முதல் பக்கத்தை…
பளிச்சிடுகின்றன
எனக்கு நான் எழுதிக் கொண்ட
பத்துக்கட்டளைகள்
ஒன்றையாவது
கடைபிடித்திருந்தால்
ஒரு அடியேனும் உயர்ந்திருப்பேன்.
இப்பொழுது
என் கையில்
இன்னொரு எழுதப்படாத
புதிய 365 பக்கங்கள்
