சுரேஷ் ராஜகோபால்/பருவகாலம்

சொல் புதிது, இணைய கால, கவி அரங்கம், தேதி 02.01 2024 கிழமை செவ்வாய் , நேரம் மாலை 05.10,” பருவகாலம் ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.

அதிகாலை முதல் நள்ளிரவு தாண்டியும்
குளிர் நடுங்க வைக்கிறது,
இது பின்பனி காலம் அல்லவோ
தெரிந்தது இருந்தும் நடுக்கமுண்டு.

அழகான சூழல்
இயற்கை மெதுவாகச் சிரிக்கிறது
காலமும் மாதமும் மாறிமாறி வருகிறது,
பனிக்காலம் போனால் வேனில் வந்துவிடும்.

கோடையில் வெப்பமும்
குளிர் காலத்தில் நடுக்கமும்
உடலைத் தீண்டும், இதற்குப்
பழகிய பின்னும் அச்சம் தருகிறது.


சிட்லபாக்கம்
02/01/2024 மாலை 05.10