
வாழ்த்தி விட்டு போன
உன்னை வாழ்த்தவா?
வாழ்த்தி விட்டு வரவேற்கும்
உன்னை வாழ்த்தவா?
எதை வாழ்த்த?
நல்லதை செய்து போன
உன்னை வாழ்த்தவா?
நல்லவைக்கு நம்பிக்கை தரும்
உன்னை வாழ்த்தவா?
எதை வாழ்த்த?
இறந்து நிலைத்து போன
உன்னை வாழ்த்தவா?
பிறந்து நிலைக்க போகும்
உன்னை வாழ்த்தவா?
எதை வாழ்த்த?
இளமையாய் முடிந்து போன
உன்னை வாழ்த்தவா?
முதுமையாய் தொடர போகும்
உன்னை வாழ்த்தவா?
எதை வாழ்த்த?
தமிழ் முதல் மாதம்
சித்திரையே
உன்னை வாழ்த்தவா
ஆங்கில முதல் மாதம்
ஜனவரியே
உன்னை வாழ்த்தவா
எதை வாழ்த்த?
ஆங்கில மாதமே
உன்னை ஆங்கிலத்தில் வாழ்த்தவா?
எப்படி ஆயினும்
உன்னை தமிழில் வாழ்த்தவா?
எப்படி வாழ்த்த?
தெரியாத பதில் தான்
தெளிந்த நிலையில்
தெரிந்தது வருடம் தோறும்.
புரியாத குழப்பம் தான்
புரிந்த நடையில்
புது வருடம் தோறும்.
–அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்
