
அழகிய சிங்கரின் என்பா சரம்
(1)
புத்தாண்டில்,இன்று முன்கை தெய்வம்
ஒன்று, விரும்பியே
அங்கையால் அரவணைத்தே,
தூக்கி விட; நம்பிக்கையுடன் பற்றியே
மேலேறு! குறைவில்லை உனக்கு.
(2)
வெற்றியாளன் வெகுவாகவே அகந்தைக்கு ஆட் படலாம்.
சாதனையாளன் சமரசம் செய்து கொள்வான்
நீ முயற்சியாளனாக இருக்கையில் அவ்வப்போது
கிடைக்கும் அங்கையில் கனி.
(3)
நண்பர்களே! புத்தாணாடில் பயனைக்
குறியாக
வைப்பதை விடுத்து;
உங்கள் காரியத்தில்
கவனமாக இருங்கள். இள நுங்கு போல்;
இனிக்கும் உங்கள் முயற்சி
1-1 -2024
