மதுவந்தி/புத்தாண்டுக் காலை

     ..                                 
  சமூக வலைதளங்களும் 
  ஊடகங்களும் எழுப்பிய 
  கொண்டாட்டக் கூச்சலில் 
  அலறியடித்து அதிகாலை 
  எழுந்தேன். 
  காகம்,மைனா, புறாவென 
  கலந்த குரல்களின்    
  அதே கச்சேரி,
  ஜன்னல்திரை விலக்க 
  மகிழ்வோடு கையசைக்கும்    
  அதே வேப்பமரம்,
  எழுவதா வேண்டாமாவென
  மேகப்போர்வை லேசாக நீக்கி
  எட்டிப் பார்க்கும் 
  அதே காலைக் கதிரவன்,
  ஜன்னல் திறக்க 
  ஆசையாய் ஒடிவந்து
  மெல்ல முகம் வருடும் 
  அதே குளிர்காற்று,
  வெண்மை,சாம்பல்,நீலமென 
வண்ணக் குவியல்களாய் 
மேகங்கள் தவழும்  
அதே விரிவானம். 
எதுவும் புதியதாய்த் 
தெரியவில்லை. 
குளியலறைக் கண்ணாடியில் 
முகம் நோக்க 
நான் புதியதாய்....
                   .  01.01.2