நாகேந்திர பாரதி/வைகறை நீயே

அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் – 76

வாழ்க்கைக் கடலின்
சுழிப்பிலே உருண்டு

வாழ்க்கைப் புயலின்
வேகத்தில் சுருண்டு

வாழ்க்கைப் பாதையின்
இருளிலே மருண்டு

திக்கித் திணறித்
திரிந்த போதிலே

கடலின் கரையாய்
புயலின் அமைதியாய்

பாதையின் வெளிச்சமாய்
வாழ்வினை மீட்டாய்

எந்தனை மணந்த
இல்லறத் துணையே

வைகறை நீயே
வாழ்வும் நீயே

——