இனிக்கும் தமிழ் – 193/ டி வி ராதாகிருஷ்ணன்

சரஸ்வதி அந்தாதி

கல்லும் சொல்லாதோ கவி

கம்பன் கவிதைகள் …போற்றப்பட வேண்டியவை
எப்படி தன்னால் எழுத முடிந்தது ?

இந்த கவிதையைப் படியுங்கள்…புரியும்

கல்விக் கடவுளான சரஸ்வதியை அல்லும் பகலும் துதித்தால் அது கல்லானாலும் கவிதை சொல்லும் ஆற்றல் பெருமாம்..

படிக நிறமும் பவள செவ்வாயும்
கடி கமழ் பூந்தாமரை போன்ற கையும் – துடி இடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி

படிக நிறமும் -படிக நிறமும்
பவள செவ்வாயும் – பவளம் போன்ற சிவந்த இதழ்களும்
கடி கமழ் -உயர்ந்த மனம் வீசும்
பூந்தாமரை போன்ற கையும் – மென்மையான தாமரை போன்ற கைகளும்
துடி இடையும்- சிறிய இடையும்
அல்லும் பகலும் – இரவும் பகலும்
அனவரதமும் – எல்லா நேரமும்
துதித்தால்-துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி – கல்லும் கவி சொல்லும்

கல்லே கவி சொல்லும் போது நம்மால் முடியாதா என்ன?
கல்விக் கடவுளைத் தொழுவோமாக!

               -