
78வது இணையகாலக் கவியரங்கம்.
பரபரத்துக் கிடக்கிறது
காலை நேர கடை வீதி
அவரவர் கவலை அவரவர்க்கு
கடந்து செல்கிறது
அவசர ஊர்தி
சீருடை அணிந்த மழலை
தந்தை கையிலிருந்து தன்னை
விடுவித்துக் கொண்டு
நட்டநடு சாலையில் ஒரு கணம்
கைகூப்பி கண்மூடி நிற்கிறது
மூதாட்டியொருத்தி தன் தளர்ந்த
கரங்களை குழந்தையின் தலையில்
வைத்து விட்டு நடக்கிறாள்.
பிரியத்தின் பூரிப்பில்
மழைத்தூறலை தெளித்தபடி
சுழல்கிறது பூமி

மழைத்தூறலோடு சுற்றும் பூமி..
சிறப்பு
Good my dear kavignar vaidhegi nice quotes