அழகியசிங்கர்/மஞ்சள் நிறச் சட்டை..

பரமசிவன் தன் இருப்பிடத்தின் பக்கத்துல இருக்கிற மூதாட்டியை தினமும் கவனித்துக் கொண்டு வருகிறான். அவள் கழுத்துல இருக்கிற தங்கச் செயின்தான் அவன் குறி.

மூதாட்டிக்கு வயது 85இருக்கலாம். அன்று அவள் வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற கடைக்குச் சென்று வீட்டிற்கு வேண்டிய மளிகை சாமான்களை வாங்கிக் கொண்டிருந்தாள்.

பரமசிவனுக்கு இதுதான் சரியான நேரமாத் தோன்றியது. அன்று தெருவிலும் ஜன நடமாட்டம் குறைவாக இருந்தது.

மூதாட்டி பக்கத்துல போய் நின்று யாரும் அறியாத நேரத்தில அவள் கழுத்துல இருக்கிற தங்கச் செயினைப் பிடுங்கப் போனான்.

அவன் இழுத்த இழுப்பில் செயின் பாதி அறுந்து விழுந்தது. மூதாட்டி பெரிதாக சத்தம் போட்டாள்.

அவள் ஒரு வினாடி தடுமாறினாலும் சுதாரித்துக் கொண்டு அவள் கழுத்துல இருக்கிற மீதி செயினை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

அங்கு கூட்டம் கூடறதுக்கு முன் ஓட்டமாய் ஓடிவிட்டான் பரமசிவன் பாதி அறுந்த செயினுடன்

மூதாட்டி பக்கத்தில இருக்கிற பேலீசுல புகார் செய்தாள்.

கீழ்கண்டவாறு அவனைப் பற்றி சொன்னாள்.

  • நடுத்தர உயரமாய் இருந்தான்
  • இந்தப் பகுதியில்தான்
    எங்கோ இருக்கான்
  • மஞ்சள் நிறச் சட்டைப்
    போட்டிருந்தான்
  • சைக்கிள்ல வந்திருந்தான்

மூதாட்டி கூறிய புகாரை எடுத்துக் கொண்ட போலீசார் ஒரு வாரமாக பரமசிவனைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.
அன்று
போண்டா விக்கிற கடையின் முன் பரமசிவன் சைக்கிளில் வந்து இறங்கினான். அவன் போதாத காலம் அவன் மஞ்சள் சட்டைப் போட்டிருந்தான்.