
நான் தொலைந்தது
உங்களுக்கு
தெரிந்திருக்கலாம்…
நான் தொலைந்து கொண்டிருந்தது
உங்களுக்கு தெரிந்திருக்கலாம்..
நான் எனை
தொலைக்கப்போவதும் கூட
உங்களுக்கு தெரிந்திருக்கலாம்..
நான் முழுவதுமாய்
எனக்கே எனக்கு
கிடைப்பது மட்டும்
உங்களுக்கு தெரிய
வாய்ப்பே இல்லை..
தெரிந்திருந்தால்
நான் நானாக
கிடைக்கவில்லை…
நீங்கள் நீங்களாக
வாழவில்லை!
நெருப்பு விழிகள்
