நவீன விருட்சம் /நாகேந்திர பாரதி

35 ஆண்டுகளாக வெளிவரும் அழகியசிங்கரின் ’ நவீன விருட்சம் ‘ இலக்கிய இதழின் டிசம்பர் 2023 – 124 ஆவது இதழில் வழக்கம் போல் அழகியசிங்கர் தேர்ந்தெடுத்த சிறப்பான கதைகள் , கட்டுரைகள் , கவிதைகள் .

இந்தியன் வங்கியில் சேர்ந்து வேலை பார்த்தபோது , சந்தா கட்டி வாங்கிப் படிக்க ஆரம்பித்த ஆரம்ப இதழ்கள் நினைவுக்கு வருகின்றன . முப்பத்தைந்து வருடங்கள் நிறைந்து விட்டன . அழகியசிங்கருக்கு வாழ்த்துகள் .

இந்த இதழில் , முக்கியமாக ச. சுப்புரத்தினம் அவர்களின்
‘ பாரதி – ஸ்ரீ அரவிந்தர் – ஓர் அறிமுகம் ‘ கட்டுரையைக் குறிப்பிட்டு ஆக வேண்டும் .

சென்னையில் பாரதியும் , கல்கத்தாவில் அரவிந்தரும் தீவீர சுதந்திர வேட்கையோடு பாடு பட்ட நாட்கள் தொடங்கி , இருவரும் புதுவையில் சேர்ந்து கழித்த நாட்கள் வரை , அவர்களின் பத்திரிகை வாழ்க்கை , வறுமை நிலை , அறிவுத் திறன் , ஆன்மீக நாட்டம் அனைத்தையும் ஒப்பிட்டு எழுதப் பட்டுள்ள அருமையான ஆராய்ச்சிக் கட்டுரை .

அத்துடன் , மற்றப் படைப்புகளையும் சேர்த்து , நவீன விருட்சம் வாங்கி படித்து மகிழலாம் .
சந்தா விபரங்கள் மேலே உள்ள போட்டோவில் உள்ளன .