சசிகலா விஸ்வநாதன்/ஆத்மாவின் விடுதலை

இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
மாலை மணி 5-15
திங்கட்கிழமை

கவிதையின் தலைப்பு

ஆத்மா சுதந்திரமானதா?

யாக்கையில் அகப்பட்டு
அனுதினமும் துன்புற்று
ஆவலாதியில் அல்லாடுகிறதே!

ஐம்புலன், புலனறிவு அடங்க
ஆத்மா விடுதலை அடையும்
என்போரிடம்
கேட்க வினா ஒன்று என்னிடம் தங்கியுள்ளது.

வினாவிற்கு இது அது என
விடைகள் பலவாறாகப்
பகருகிறார்கள் பலரும்.

நான் வினவும் தளம்
இதுவும் அதுவும் அற்ற
வேறு.

ஆத்மா விடுதலையாகும் தருணம்
நான் அதை அறிவேனா?
எனக்கு அது புலப்படுமா?


8-1-2024