அவன் தேவை பிச்சை/சுரேஷ் ராஜகோபால்

சொல் புதிது, இணைய கால, 82வது கவி அரங்கம், தேதி 08.01 2024 கிழமை திங்கள் , நேரம் மாலை 05.55 “” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.

“அவன் தேவை பிச்சை @ பிச்சைக்காரன்”

உடல் ஊனம் அங்கஹீனம்
என்றே சிலர் வலம்வரக்
கையிலோ சட்டைப் பையிலோ
ஒன்றுமில்லாது பலரும் வலம்வர,

வேலையோ ஒன்றும் கிடைக்கவில்லை
தம்படி வரும்படி இல்லாத நிலையில்
உடல் குறுக்கி
மனதில் வெட்கம் விட்டகல,

மானம் விட்டு குரல்
கொடுப்பான் “அம்மா தாயே”
அன்றைய பசிக்கு அவன் தேவை
உணவோ பணமோ கிடைத்தால் போதும்.

அவன் ஒரு வானம்
பார்த்த பூமி
உலகின் ஏளனப் பார்வை நடுவே
உலகில் அவனும் வலம்வருவான்.

சுரேஷ் ராஜகோபால்
சிட்லபாக்கம் .
08 01 2024 மாலை 05.55