
82வது இணையகாலக் கவியரங்கம்.
எழுதி நாளாகி விட்டது
ஏதாவது எழுத வேண்டும் .
காலையிலிருந்து இரவு வரை
பட்டியலிட்டால் எல்லோருக்குமானதாக
எத்தனையோ பணிகள்
எனக்கென்று தனிப்பட்ட முறையில்
எதுவுமில்லை.
எழுதுவதைத் தவிர …
ஆடியதையும் பாடியதையும்
மேடை ஏறி பேசியதையும்
எடுத்த புத்தகத்தை படித்து முடித்தப்பிறகே
கீழே வைத்ததையும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களைப் பெரும்பாலும் எல்லாப் பெண்களுமே கடந்தகாலமாகக் கூறி முடித்துக் கொள்கையில்…
சுயம் அழிந்ததை இயல்பாய்
வேறென்ன செய்வது என்று கடந்து விடுகையில்
வேறென்ன செய்ய முடியும் என்று
இயலாமையில் கண் கலங்குவதில்
இழப்பின் வலி தெரிகிறது
வலி தாங்குவது எல்லோராலும் இயலாது
எழுதி நாளாகி விட்டது
ஏதாவது எழுதவேண்டும் இன்றாவது.
.

தொடர்ந்து எழுதுங்கள்