சிறகு இரவி
**
“எப்போது சேலை பார்த்தேன்?
பிஞ்சு வயதில்
அம்மாவின் ஆரணி
அஞ்சு வயதில்
பாட்டியின் சுங்கிடி
பத்தில் பளபளக்கும்
சித்தியின் தர்மாவரம்
எப்போதும் மொடமொடக்கும்
பெரியம்மை வாயில்
இன்னும் அகலவிழி பார்த்த
நைலான் ஷிஃபான் டஸார்!
இவளுக்கென்று வாங்கப் போனபோது
ஒன்றும் புரியவில்லை
அவள் ஷிஃபானா
சுங்கிடியா என்று!
மனைவிகளின் தேர்வு
கணவர்க்கு ஜிக்ஸா!
**

மிக்க நன்றி அழகிய சிங்கர்!