ஓவியம் ஒரு ஒலியில்லாத கவிதை

நாகராஜன் அரவக்கோன் 

ஜெயதேவரின் கீதகோவிந்தம் பற்றி நான் இங்கு சொல்லப் போவதில்லை.

அதைத் தொகுப்பு ஓவியங்களாக 16 17 ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத் உத்திரப்பிரதேசம், பஹாடி எனப்படும் இமயமலைப் பள்ளத்தாக்குப் பஞ்சாப் பகுதிகள் மாமன்னர் அக்பரின் அவை என்று பல ஓவியர்களால் படைக்கப்பட்டது.

கவிதையும் ஓவியமும் உடன்பிறப்புகள். கவிதை ஒரு ஓவியம்போலத் தோற்றம் கொடுப்பதும், ஓவியம் ஒரு கவிதையைப் படிக்கும் அனுபவம் கொடுப்பதும் அவற்றின் வெற்றியாகக் கருதப்படுகின்றது.

இந்த இரண்டின் இணைந்ததன்மை உலகெங்கிலும் காணப்படுவதுதான். “ஓவியம் ஒரு ஒலியில்லாத கவிதை, ஒரு கவிதை வாய்வழி வரும் ஒலியின் ஓவியம்” என்று ஒரு சீனப் பழமொழி இங்கு நினைவுக்கு வருகிறது.இங்கு இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நான் தீட்டிய ஓவியத்தை உங்களுடன் பகிர்கிறேன். A-3 அளவு தாளில் அக்ரிலிக் வண்ணம் கொண்டு தீட்டிய கையடக்க ஓவியம்