கே புஷ்ப ராஜ்/என்னிடம் பேசிய கடவுள்

இணைய கால கவியரங்கம்

நாள் : 8.1.24

வயலங்கரை சாலையில்
மழைத்தூறலில் குடையுடன் நடந்து கொண்டிருந்தேன்

நனைந்து கொண்டே வந்தவருக்கு
என் குடையில் ஒதுங்க இடம் கொடுத்தேன்
“நீர் யார்”
“விலாசம் என்ன?’ வினவினேன்
“கடவுள்” என்றார்
“உங்களிடம் கேட்க சில கேள்விகள் உள்ளன” என்றேன்
“கேளும்” என்றார்
“ஆலயங்களில் அமர்ந்து பிரார்த்திப்பவர்களிடம்
ஏன் தோன்றவில்லை”
என்றேன்.
“கட்டு கட்டாக வேண்டுதல் வைத்து என்னை தேடுகிறார்கள் சுமக்க ஏலில்லை” என்று கவலைப்பட்டார்.

“கோவில்களில பாலாபிஷேகம்” என பல அபிஷேகங்கள் செய்கிறார்களே
ஏன் அவர்களிடம் தோன்றவில்லை” என்றேன்
“பல்லாயிரம் பேர் உணவின்றித் தவிக்க
அவர்களுக்கு கொடுக்காமல் வீணாக்குகிறார்களே
என்று வேதனைப்பட்டார்.

“‘பாங்கொலிகளும் ஐவேளை பிரார்த்தனையும்
உமக்கு கேட்கவில்லையா” என்றேன்
“தங்களின் கடமைகளை செய்யாமல்
நேரத்தை வீணடிக்கிறார்களே
என்று வருத்தப்பட்டார்

“காசாவில் குண்டூவீச்சுக்கு இரையாகும்
குழந்தைகளைப் பார்த்தீர்களா?’ என்றேன்
“சுடாதீர்கள் என்று வெள்ளைக் கொடியசைத்தேன்” என்னையே சுட்டு வீழ்த்தினார்கள்” என்றார்.