
சேலம் மாநகரில் வசித்து வரும் பெண் கவிஞர் சக்தி அருளானந்தம் அவர்களின் கல் பூக்கும் காலம் புத்தகத்தில் இருந்து அவரின் கவிதை
சிறகா வின்
வாசிப்பில்.
8-1-2024.
ஆர்ப்பரிக்கும் அருவி
அதன் தவத்தைக் கலைக்கவேயில்லை
ஊடுருவ முடியாத ஒலி அதிர்வு
திறப்பற்று இரைச்சலாய்
இயலாமையை வெளிப்படுத்துவதாய்
உள்ளொடுங்கி
உயிர்ப்படங்கி
கிடந்த காலம் முடிந்து
ஒளிர்ந்ததன்
தவம் கைகூட
இப்போது
கல் பூக்கும் காலம்.
