ஹரணி கவிதை

இணையக் காலக் கவியரங்கம்
நாள் : 8.1.24

முழு மரத்தையும்
ரசிக்க வாழ்நாள் போதாது..

சிறகிலையின்
சிற்றிலையடுக்கின்
இறகுகளை நேர்த்தியை
ரசிக்கிறேன்..

அவசரச் செய்தி சொல்ல
வந்த நண்பர்
சிற்றிலை நேர்த்தியின்
இறகுகளை உருவியபடிப் பேசுகிறார்..

காதுகளை மூடிக்
கண்களை மூடுகிறேன்
வழிகிறது கண்ணீர்.