சசிகலா விஸ்வநாதன்/யார் துறவி

இனிய மாலை வணக்கம்.
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
செவ்வாய்க்கிழமை
மாலை மணி5-15
கவிதையின் தலைப்பு

அனைத்தையும் துறந்தவர் துறவியா?
அனைத்தையும் விலக்குபவர் துறவியா?

எதையும் பாராதவரும்,
எதையும் கேளாதவரும்,
எதையும் சுவைக்காதவரும்,
எதையும் ஸ்பரிசிக்காதவரும்,
எதையும் எண்ணாதவரும்
துறவியா,
யோகியா?

துறக்காமல் விடுபடுபவனே, துறவி!
போகம் விலகி இருப்பவனே, யோகி!
ஐம்புலன் அடக்கி
ஆள்பவன் துறவியல்ல.
ஐம்புலன் விழும் தானே!
அடங்கி இருப்பவனே துறவி;
இன்பத்தில் தோய்ந்தும்
பரமானந்தத்தில் திளைத்தும்!

ஓடு அகல் விளாம்பழம் போல்
நீர் சுண்டி,
சிரட்டை தொடா தேங்காய் போல்
இனித்துக் கிடந்து,
அதையும் அறியாமல்
கிடப்பவனே
துறவி!
அவனே பரமஹம்சன்!
சச்சிதானந்த பரமன்!


9-1-2024