எஸ்ஸார்சி/காலம் மாறுது

இணைய கால கவியரங்கம் 82

8/1/24

பேனாவால் எழுதியிருந்தால்
என் பிள்ளைகளே படிக்கமாட்டார்கள்
தாத்தா காலத்து கிரய பத்திரத்தை
இன்றைய தலைமுறை
வாசிக்கவே மாட்டார்கள்
பேனாவை வைத்து எழுதுவது
என்பது விடைபெற்றுக்கொள்ள
மடிக்கணினி அவ்விடத்தை ஆக்கிரமித்தது
அகராதி இல்லாது படிப்பது சாத்தியமில்லை
என்பது போய்
கூகிள் எஜமானர் இட்டபணி எல்லாமாய்
செய்துகிடக்கிறது
எழுத்துப்பிழை இலக்கணப்பிழை
எல்லாம் கணினியின் நிர்வாகமே
வாயினால் சொல்வதைக்
கணிப்பொறி
டைப்
அடித்துக்காட்டுகிறது
ஜோராய் ஒரு மொழியில்
தருவதை பிறிதொரு
மொழியில் பெயர்த்துக்காட்டுகிறது
கணிப்பொறியே
இனி கவிதைகள் எழுதும்
கவியரங்கம் நிகழ்த்தும்.

One Comment on “எஸ்ஸார்சி/காலம் மாறுது”

  1. உங்கள் ஆசையைக் கெடுப்பானேன்! இதோ உங்கள் கவிதையின் கூகுள் மொழிபெயர்ப்பு!

    If it was written with a pen
    My children will not study
    Grandfather’s purchase deed
    Today’s generation
    They will never read
    Writing with a pen
    means to say goodbye
    The laptop occupied that space
    Reading is impossible without a dictionary
    is gone
    Google mastered everything
    is being done
    A typo is a grammatical error
    Everything is managed by the computer
    What is said by mouth
    Computer
    Typ
    Shows off
    Jorai in a language
    It is another to give
    Translating into language
    The computer itself
    Will write poems from now on
    Kaviarangam will perform.

    Post navigation

Comments are closed.