
ஓடும் புகை வண்டியில் விடாமல் பதிவு செய்திருக்கிறேன்
பின்னணி இசையுடன் எனது கவிதை. 🥰🥰🥰. சென்னை புத்தகக் கண்காட்சியைப் பார்க்க மதுரையில் இருந்து தேஜாஸ் வண்டியில் பயணம்.
83 ஆவது இணைய காலக் கவியரங்கம்
நான் அவனில்லை
அந்நியன் ஒருவன்
எனக்குள் ஒளிந்திருக்கிறான்!
அவ்வப்போது தலையை நீட்டி
எட்டி எட்டிப் பார்க்கிறான்!
நான் சொல்வதைக் கேட்காமல்
தானே முடிவெடுக்கிறான்!
அடக்கி வைக்கிறேன்!
அடங்க மறுக்கிறான்!
எனது கோபத்தில்
எனது சோகத்தில்
எனது கண்ணீரில்
எனது புலம்பலில்
எனது கடுஞ்சொற்களில்
எனது வெறுப்பில்
எனது இயலாமையில்
எனது சோர்வில்
எனது முகச் சுளிப்பில்
எனது பேராசையில்
எனது பொறாமையில்
எனது வன்முறையில்
எனது மௌனத்தில்
வீற்றிருக்கும் அவன்
நானில்லை நிச்சயமாக
அந்நியன் தான்!
