
ஒன்று
இரண்டு
மூன்று என்று நூறுக்கு மேல்
ஏறுவரிசையில் சொல்லிக்
கொண்டே போகலாம். 1
எண்களும் சிரித்துக்கொண்டே
நம்மோடு பயணிக்கும்
எண்களுக்கு ஏற்றமும் இல்லை
இறக்கமும் இல்லை
யார் சொன்னாலும், 2
அது அப்படியே
வரிசையில் வரும்
யாராவது தவறாகச் சொன்னாலும்
மாற்றி மாற்றி எழுதினாலும்
எண்கள் வரிசை என்றும் மாறாதே. 3
சிட்லபாக்கம்.
09 01 2024 மாலை 05.25
