
இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
புதன் கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு
அழகிய சிங்கரின் என்பா சரமாக
( 1 )
அலைகடல் கடக்கலாம்; ஆசைஉண்டாயின்;
அகண்டமும் தாண்டலாம்;
மனவுறுதி இருப்பின்;
உடல் வலு ஒரு பொருட்டாகுமோ;
மனம் விழைந்து ஓங்க!
(2)
மன விழைவு ஓங்கி
வர;
வினைகளின் தொல்லை விளைவுகள், தேர்ந்து
விலக்கப்படும்.விரைவின் விசை கூடும்.
மனம் கூர் முனைப்படும்.
(3)
கூர்முனை அம்பு இலக்கைத் தவறாது,
விரைவில் அடையும், பெருமை அடையும்.
அகிலம் வியக்க
வித்தைகள் புரியும்.
இறையும் துணை நிற்கும்.
10-1-2024
