அழகியசிங்கர்
என்பா 61
இரண்டு நாட்கள்
கழித்து என் கவிதைகளைத்
திரும்பவும் படிக்கிறேன்
நான்.
எனக்குள் தாங்க முடியாத மகிழ்ச்சி
ஆனந்த கூத்தாடுகிறேன் நான்.
என்பா 62
மழையைப் பற்றி
கவிதை வேண்டாமென்றால்
யாரும் கேட்பதில்லை
பாருங்கள் எங்கள்
தெருவிலுள்ள வீடுகளில் புகுந்து
மழை செய்யும்
அட்டகாசத்தை
கடவுளே
