எஸ்.வி.வேணுகோபாலன்
வான் திறந்து
நடத்தும் மழையரங்கம்
மழை நடத்தும்
பொழிவரங்கம்
ஜலதரங்கம்
வீதிகள் சாலைகள் எங்கும்
வெள்ள நீர்ச்
சூழரங்கம்
குடியிருப்புக்குள் இருந்து
வானிலை கேட்போர்க்குக்
காப்பரங்கம்
எல்லாம் தொலைத்து
ஏதும் பிடிபடாமல்
எங்கெங்கோ அலைந்து திரியும்
எளியவர் உலகத்தில்
எப்போது வடியும்
என்றைக்கு விடியும்
என்பது மட்டும் தான்
வேட்பரங்கம்.

சிந்திக்க வைக்கும்
சொல்லாக்கம் .
“எளியவர் வரியவர்
இந்த பூமிக்கு
உரியவர் வடிக்கும்
கண்ணீரே இந்த
பேய் மழை.”
எப்போது விடியும் என்பது தான் கேட்பரங்கம் என்று முடித்திருக்கலாமோ?
வான் நடத்தும் மழையரங்கத்தை இந்த சூழலில் ஏற்க மறுத்து மக்கள் தெறித்து ஓடினாலும் அதன் ஜலதரங்க கச்சேரியால் மக்களை துரத்த்திதுரத்தி மிரட்டுகிறது
அருமை வார்த்தைகள் ஜலதரங்கத்தில் இருந்து வரும் இசைபோல் வாசிப்புடன் விழுகிறது