வீட்டில் மழை


ஆர் வத்ஸலா

வீட்டில் அமர்ந்து
கொட்டிக் கொண்டிருக்கிறீர்கள்
கவிதை மழையை

என் வீட்டில் பொழிகின்றது
நிஜ மழை
காசு ‌வாங்கியதும்
கம்பி நீட்டிய
கட்டிடம் கட்டுபவர்
கவனக் குறைவாலோ
அல்லது
பேராசையாலோ