
இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
வெள்ளிக்கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு
கட்டிக் கொண்டவன்
விட்டு விட்டான்!
என்ன ஆனானோ?
தொட்டில் மதலைக்கு
பட்டில் இல்லாவிடினும்,
பருத்தியில் ஒரு உடுப்பும்;
வட்டிலில் பாலன்னம்
இடாவிடினும்; பழைய
சோறு இடணும்.
பள்ளிக்கூடம் அனுப்பணும்;
பன்னிரெண்டு வரையாவது
படிக்கணும்.
பாவி! நான் தட்டுக் கெட்டது போதும்.
அவ நாலு காசு சம்பாரிக்கணும்.
தன் பலம் கொண்டு,
திரும்பியே பார்க்காமல்,
அம்பலம் ஏறணும்.
தானும் ஏமாறாமல்,
யாரையும் ஏமாற்றாமல்,
தன் வழியே சிறக்கட்டும்.
வறட்டியை நான்
தட்டினாலும்,
வறுமை ஓடிப்போகும்.
மெத்த காலம் இல்லை!
சித்த காலம்தான்
சிகரம் எட்ட!
தகரமும் தங்கமாக!
12-1-2024
