
அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் – 86
இருக்கத்தான் செய்கிறார்கள்
இறைவர்கள் மனிதர்களாய்
முடியாதோர்க் கைப்பிடித்துச்
சாலையினைக் கடப்போராய்
விபத்தில் கிடப்பவர்க்கு
விரைவாக உதவுவோராய்
தெருவோர விலங்குகட்கும்
தின்பண்டம் கொடுப்பவராய்
பணத்தால் மட்டுமல்ல
பண்பாலும் உதவுவராய்
எத்தனையோ இறைவர்களை
எப்போது பார்த்தாலும்
வணங்கத்தான் செய்கின்றேன்
வாழ்த்துதற்கு வார்த்தையில்லை
——-
