சசிகலா விஸ்வநாதன்/பொய்க்கும் ஆயுதம்

இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
செவ்வாய்க்கிழமை
மாலை மணி5-15
கவிதையின் தலைப்பு

வீட்டுமன் ஆயுதம் பேசியது;
கடமையும், கையறு நிலையும்..‌ மட்டும்..
பொய்த்தது.

துரோணர் , கிருபர் பாணம் புகன்றன;
தம் வீரம்… மட்டுமே
பொய்த்தன.

கர்ணன் பாணம்
காட்டியது;
செஞ்சோற்றுக்கடன்…
பொய்த்தது.

விசயன் காண்டீபம்
உமிழ்ந்தது..
நெஞ்சின் வெஞ்சின சபதம்..
வாகை சூடியது.
பஞ்சரின் சினமும்,
பாஞ்சாலி கண்ணீரும்
கூர் கொண்டதன்றோ;
குருநந்தன் கூர் அம்பிலே


16-1-2024